Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

சாரலாய் தீண்டினாய் அன்பே டீசர்

சூரியா வேகமாக வீட்டுக்குள் ஓடியவன் “ஓ காட்! இன்னும் த்ரீ மினிட்ஸ் தான் இருக்குதா?” என்றபடி வீட்டினுள் அவளைத் தேடச் சந்தியா அங்கே இல்லை. மூச்சு படபடக்க வீட்டின் வெளியே சென்று பார்த்தவன் வீட்டைச் சுற்றிலும் பரந்துவிரிந்திருந்த புல்வெளியின் நடுவில் போடப்பட்டிருந்த ஒற்றை மரபெஞ்சில் உட்கார்ந்தபடி வானில் புதுவருடத்தை வரவேற்பதற்கான வாணவேடிக்கைகளை ரசித்தபடி இருந்தச் சந்தியாவைப் பார்த்துவிட்டான்.
 
வெள்ளைநிற நீளமான டாப் அணிந்து அவளது வழக்கமான கூந்தல் அலங்காரமான போனிடெயிலுக்கு மாறியிருந்தவளின் முட்டைக்கண்கள் வானத்தில் தெறிக்கும் பூஞ்சிதறல்களைக் கண்டு இன்னும் அகலமாக விரிய எப்போதும் அவனது தோழி பிரவுனியாகத் தெரிந்தவள் இன்று அவளை ஒரு காதலனாகப் பார்க்கும் போது பேரழகியாகத் தெரிந்தாள்.
 
இந்தப் பேரழகின் சொந்தக்காரன் தான் என்னும் கர்வம் மின்ன ஆவலுடன் அவள் அருகில் சென்றுநின்றவன் பூங்கொத்தை முதுகின் பின்னே மறைத்துக்கொள்ள சந்தியா அப்போது தான் அவன் வந்ததைக் கவனித்தாள். காலை கோயிலில் இருந்து வந்ததிலிருந்து இருந்த குழப்பமான மனநிலையை அந்த வண்ண வண்ண வாணவேடிக்கைகள் மறக்கடித்துவிடவே சூரியாவிடம் அதைச் சுட்டிக்காட்டியபடி எழுந்தவள் “மார்ஸ்மாலோ கவுண்ட் டவுன் கிராக்கர்ஸ் பாரு” என்றபடி பத்து வடிவத்தில் வெடித்த வெடியைச் சுட்டிக்காண்பிக்க அவனது கவனமோ  அதைக் காண்பித்தவளின் மேலே தான் இருந்தது.


 
சூரியா அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன் அவளைப் பார்க்கும் போதே கவுண்ட் டவுன் ஆறை நெருங்கியிருந்தது…சந்தியா இவன் என்ன சொல்லப் போகிறான் என்று சூரியாவைக் கவனிக்க அங்கே கவுண்ட் டவுன் சமகாலத்தில் ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது…
 
ஐந்து…… நான்கு….
 
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ பிரவுனி” என்று அவன் சொன்ன கணம் சந்தியாவின் விழிகள் அழகாக விரிய அவள் இதழ்களோ வழக்கம் போலக் கிண்டலாக “என்ன இது 2019யோட லாஸ்ட் ஜோக்கா?” என்று கேட்க அவன் இல்லையென்று தலையாட்டினான்.
 
மூன்று…. இரண்டு…. ஒன்று…..
 
“ஐ லவ் யூ பிரவுனி” என்று கூறி சூரியா பூங்கொத்தை நீட்டவும் வானில் ‘ஹேப்பி நியூ இயர்’ என்ற எழுத்துக்கள் மின்னவும் சரியாக இருந்தது.

One Month Plan – 30 Days (20 Novels)

Access for 30 days

Buy Now

Quick (3-Day) Plan (2 Novels)

Access for 3 days

Buy Now

Unlimited Plan (One Month) (Unlimited Novels)

Unlimited Access for 30 days

Buy Now

ரூ.50 செலுத்தில் தளத்தில் இருக்கும் 20 நாவல்களை ஒரு மாதத்துக்குப் படிக்கலாம்.

ரூ.20 செலுத்தி மூன்று நாட்களுக்கு இரண்டு கதைகளைப் படிக்கலாம்.

ரூ.100 செலுத்தி ஒரு மாதத்துக்குத் தளத்தில் இருக்கும் அனைத்துக் கதைகளையும் படிக்கலாம்.

Existing Users Log In
   
New User Registration

Leave the field below empty!

*Required field
error: Content is protected !!
HomeShopCartBlogMy Account