கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிய அவந்திகா அவன் வெறும் டவலுடன் நிற்பதைக் கண்டு முகம் சிவந்தாள்.
டக்கென்று மறுபுறம் திரும்பியவள் “ஹலோ ஆள் மட்டும் பனைமரத்துக்குப் பாதி வளந்தா பத்தாது. அறிவும் வளரணும்” என்று பல்லைக் கடித்தபடி கூற
ராகவ் சாதாரணமாக “என்னோட அறிவுக்கு என்ன கொறச்சல் ஜான்சி ராணி?” என்று கேட்டபடியே உடையை மாற்ற ஆரம்பித்தான்.
“இந்த ரூம் எனக்கும்தான சொந்தம்., நான் இருக்கிற இந்த ரூம்ல யாரும் இப்பிடி அரைகுறையா டிரஸ் போட்டுட்டு வரக் கூடாது” என்றாள் அவந்திகா தீர்மானமாக.
அவனோ அலட்சியமாக “இஸிட்? ஐ வில் ட்ரை” என்றபடிக் கண்ணாடியைப் பார்த்து அவனது தலைமுடியைச் சரி செய்துகொண்டிருந்தான்.
அவனது பதிலில் கடுப்பான அவந்திகா “நீ கண்டிப்பா இத ஃபாலோ பண்ணியே ஆகணும்” என்று அவனை முறைத்தவாறே சொல்ல
“அப்பிடிலாம் உன் இஷ்டத்துக்கு நீ ரூல்ஸ் போட முடியாது. போட்டாலும் நான் அத ஃபாலோ பண்ண மாட்டேன்” என்றான் அவன் அமர்த்தலாக.
அவந்திகா அதிர்ந்தவாறே “வாட்? சப்போஸ் நான் இதே மாதிரி பண்ணா உனக்கு எப்பிடி இருக்கும்? இரிட்டேட் ஆகாது? அதே மாதிரிதான் எனக்கும்” என்றாள் சமாதானக்குரலில்.
“நீ இப்பிடி வந்தா நான் ஏன் இரிட்டேட் ஆகப்போறேன்? அது உன்னோட இஷ்டம்., இன் ஃபாக்ட் அது என்னோட குட் லக் பேபி” என்று கிண்டலாகக் கூறிக்கொண்டுக் கண்ணைச் சிமிட்டியபடி அவள் முன்னே வந்து நிற்கவும் அவந்திகாவிற்கு “இவனுக்குக் கூச்சநாச்சமே கெடையாது., அவன்கிட்ட போய் நீ இப்பிடிப் பேசுவியா” என்று நூறாவது முறையாகத் தோன்றியது.
கை எடுத்துக் கும்பிட்டவள் “ஐயா சாமி! இனிமே உன்கிட்ட இதப் பத்தி நான் பேசவே மாட்டேன்., எனக்குத் தூக்கம் வருது” என்று சொல்லிவிட்டுப் பெட்டில் அமர்ந்து அதன் குறுக்கே வரிசையாகத் தலையணைகளை அடுக்க
ராகவுக்கோ “அடுத்து இதுக்கு வேற நீ ஆர்கியூ பண்ணனும் போல ராகவ்” என்று மனசாட்சி அவனைக் கலாய்த்தது.
நேரே அவள் முன் சென்றவன் “லிசன் வாட் இஸ் திஸ்? இப்போ எதுக்கு இந்தப் பில்லோ பிரிட்ஜ்?” என்று கேட்க அவந்திகா அடுக்கி முடித்துவிட்டு அவனைப் பார்த்தாள்.
“இது என்னோட சைட். அண்ட் அது உன்னோட சைட். இந்தப் பார்டர நானும் தாண்டமாட்டேன். நீயும் தாண்டக்கூடாது” என்று சொல்லிவிட்டுப் போர்வையைப் போர்த்தி முகத்தை மூடிக்கொண்டாள்.
“ஹலோ! தூக்கத்துல என் கை கால்லாம் என்னோட பேச்சைக் கேக்காதுமா! இந்தப் பிரிட்ஜ் விடியுறதுக்கு முன்னாடியே இடிஞ்சு போயிடும்” என்றான் ராகவ் கேலியாக.
அவளோ “அதப் பத்தி எனக்குக் கவலை இல்ல. இப்போ இதத் தாண்டி நீ வரக்கூடாது. அவ்ளோதான்” என்று தீர்மானமாகக் கூறிவிட்டுத் தூங்கத் தொடங்கினாள்.
அவளது பதிலைக் கேட்டு முகத்தை மூடிப் படுத்திருக்கும் அவந்திகாவை முறைத்தவனின் பார்வையிலிருந்த கனலில் அந்த அறை எரிந்து போகாமல் இருந்தது ஆச்சரியமே!
முறைத்துக்கொண்டே அவளின் மறுபுறம் சென்று படுத்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.
அவந்திகாவுக்கும் படுத்தது உடன் தூக்கம் வரவே அன்று இரவு வினோதமாகக் கடந்தது..
மறுநாள் அதிகாலை…..
காலை 4 மணிக்குப் போனில் அலாரம் அடிக்க விழித்தான் ராகவ். தன் மீது ஏதோ பஞ்சுபொதி கிடப்பது போலத் தோன்றவும் என்னவென்று பார்த்தவனின் மார்பில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் அவந்திகா..
எவ்வித செயற்கைப் பூச்சுமின்றி குழந்தை முகத்துடன் உறங்கியவளை ரசித்தவன் அவள் முகத்தின் மீது விழுந்த முடிக்கற்றையைத் தூக்கம் கலையாமல் ஒதுக்கிவிட்டான்.
இவளா தன்னை இவ்வளவு தொந்தரவு செய்வது என்று ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவன் திடீரென்று தன் போனை எடுத்துத் தங்கள் இருவரையும் செல்ஃபி எடுத்துக்கொண்டான்.
மனதினுள் “ஜான்சி ராணி நேத்து நைட் என்ன பேச்சுப் பேசுன? இந்தப் பிரிட்ஜ் தாண்டி நான் வரக்கூடாதா? நீ மட்டும் எந்திரி. இந்தப் போட்டோ பாத்துட்டு உன் முகம் போற போக்கைப் பாத்தாதான் இன்னைக்கு நாள் எனக்கு ஹாப்பியா இருக்கும்” என்று மனதினுள் சொல்லிக்கொண்டான்.