Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

மெய் நிகரா பூங்கொடியே டீசர்

“எங்க கபேல ஃபில்டர் காபி கிடைக்காது சார்”

பணிவாய் பதிலளித்தான் அர்னவ்.

“உங்க பாரிஸ்டாக்கு ஃபில்டர் காபி தான் பிடிக்கும்… அவங்களைப் போட சொல்லி கொண்டு வாங்க மிஸ்டர்….” என நிறுத்தி அவனது பெயர்பட்டியைப் பார்த்தவன் “மிஸ்டர் அர்னவ்” என்று முடித்தான்.

அர்னவ் என்ன செய்வதென புரியாமல் விழித்தபடி சமையலறைக்குள் சென்றவன் நித்திலாவை அனுப்பி வைத்தான்.

“வேர் இஸ் மை ஃபில்டர் காபி?”

அசராமல் அவளிடம் கேட்டான் கிருஷ்ணராஜசாகர்.

நித்திலா இழுத்து பிடித்த உதடுகளை புன்னகைப்பது போல் வைத்துக்கொண்டாள்.

“எங்க கபே மெனுல இல்லாத எதையும் நாங்க செஞ்சு குடுக்க முடியாது சார்”

“ஓ.கே ஃபைன்… நெக்ஸ்ட் வீக் வரைக்கும் எங்கம்மா இங்க தான் இருப்பாங்க… அவங்களுக்கு ஊர் சுத்தி காட்ட முடியுமா?”

“சாரி… நெக்ஸ்ட் வீக் எனக்கு மேரேஜ்… என்னால எங்கயும் வர முடியாது”

நித்திலா போலிப்பணிவு காட்டி மறுக்கவும் உதட்டை ஒரு பக்கமாக இழுத்து கோணல்சிரிப்பொன்றை உதிர்த்தான் கிருஷ்ணராஜசாகர். அவள் வாயிலிருந்து திருமணச்செய்தியைக் கேட்கவேண்டுமென தானே இவ்வளவு பீடிகை!

போலி ஆச்சரியமும் சந்தோசமும் மின்னியது கிருஷ்ணராஜசாகரின் விழிகளில்.

“வாவ்… எவ்ளோ பெரிய குட் நியூஸ் சொல்லிருக்க? உன் மேரேஜுக்கு ஏதாச்சும் கிப்ட் குடுக்கணுமே நித்திலா”

தாடையில் அழுத்தம் கொடுத்து உதட்டைக் குவித்து யோசித்தான். இது அவனது மேனரிசம். ஆழ்ந்த யோசனைக்குப் போனால் இவ்வாறு செய்வது வழக்கம்.

யோசிப்பது போல இப்போது நடிக்கத் தானே செய்கிறான்? ஆனால் நடிப்பென அவள் அறிந்துவிடக்கூடாதல்லவா?

கையோடு கொண்டு வந்த பரிசுப்பெட்டியை நித்திலாவிடம் நீட்டினான்

“என்ன இது?”

“ரொம்ப நாள் கழிச்சு உன்னை மீட் பண்ணுன சந்தோசத்துல கிப்ட் ஒன்னு குடுக்கலாம்னு ஆசைப்பட்டேன்… பட் யுவர் குட் டைம், அது மேரேஜ் கிப்டா போயிடுச்சு பாரேன்… வாங்கிக்க நித்திலா”

நித்திலா வாங்க தயங்கினாள்.

“இதுல பாம் செட் பண்ணி கொண்டு வரல… கிப்ட் தான்… வாங்கி பிரிச்சுப் பாரு”

தயக்கத்தை ஒதுக்கி அவன் நீட்டிய பரிசுப்பெட்டியை வாங்கியவள் அதன் அலங்கார ரிப்பனை அவிழ்த்தாள்.

பின்னர் ஒவ்வொரு செல்லோடேப்பாக பொறுமையாகப் பிரித்து பளபளப்பான காகிதத்தை பத்திரப்படுத்தினாள்.

யாரேனும் பரிசுப்பொருள் கொடுத்தால் கிப்ட் ராப் செய்திருந்த காகிதத்தை ரிப்பனோடு பத்திரப்படுத்தி வைப்பது நித்திலாவுக்கு இருக்கும் விசித்திரமான பழக்கம்.

பெரிய அட்டைப்பெட்டியைத் திறந்தவள் அதனுள் இருந்த காகிதங்களை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

‘மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசன்’ மெதுவாக உச்சரித்தாள் அவள்.

அதில் ‘பெட்டிசனர் நம்பர் ஒன்’ என்று குறிப்பிடப்பட்ட கணவனுக்குரிய இடத்தில் கிருஷ்ணராஜசாகரின் பெயரும், ‘பெட்டிசனர் நம்பர் டூ’ என்று குறிப்பிட்டப்பட்ட மனைவியின் இடத்தில் நித்திலா கிருஷ்ணராஜசாகர் என்ற பெயரும் இருந்தது.

நான்காண்டுகளுக்கு முன்னர் அனைத்தையும் முடித்துவிட்டோமென நிம்மதியாய் இருந்தவளின் வாழ்க்கையில் அணுகுண்டாக வந்து விழுந்தது அந்தக் காகிதம்.
கிருஷ்ணராஜசாகர் அவளின் அதிர்ச்சியை அணுவணுவாக ரசித்தான்.

“ம்ம்… முழுசா படிச்சுப் பாரு”

அவன் ஊக்கியதும் எடுத்துப் பார்த்தவளின் கண்களில் நீர் நிரம்பியது.

“இ… இ… இது”

வார்த்தைகள் வெளிவர போராட தலை கிறுகிறுத்தது. அப்படியே சரியப்போனவள் சமாளித்து அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.

“என்னாச்சு நித்தி?”

குழைவாக ஒலித்தது அவனது குரல். அது அக்கறையால் உண்டான குழைவா என்பது ஐயமாக இருந்தது நித்திலாவுக்கு.

அவன் முன்னிலையில் தன்னை பலவீனமாக காட்டிக்கொள்ள விரும்பாமல் கண்களில் நிரம்பிய கண்ணீரைக் காஜலை சரி செய்வது போல கைக்குட்டையால் ஒற்றியெடுத்தாள்.

“மானிங் சாப்பிடல… அதான் தலை சுத்திடுச்சு”
சமாளித்தவள் அந்தக் காகிதங்களை அவன் முன்னே வைத்தாள்.

“இதை எதுக்கு என் கிட்ட காட்டுறிங்க?” முடிந்தவரை அமைதியான குரலில் கேட்டாள்.

“நீ மேரேஜ் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்க… நல்ல விசயம் தான்… பட் லீகலா அது பாசிபிள் இல்லனு உனக்குத் தெரியணும்ல”

“இப்ப இந்தப் பேப்பர்சை என் கிட்ட காட்ட வேண்டிய அவசியம் என்ன? இது மூலமா நீங்க என்ன சொல்ல வர்றீங்க சாகர்?”

கிருஷ்ணராஜசாகர் அந்த காகிதங்களை எடுத்துக் கொண்டான்.

“நாலு வருசத்துக்கு முன்னாடி நம்ம ஃபைல் பண்ணுன மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசனை ஜட்ஜ் ரிஜெக்ட் பண்ணிட்டார்… ஏன்னா ஆறு மாசத்துக்கு அப்புறம் வந்த ஹியரிங்குக்கு நீ அப்பியர் ஆகல… சோ, இப்பவும் நீ மிசஸ் கிருஷ்ணராஜசாகர் தான்.. அப்பிடி இருக்கிறப்ப நீ இன்னொருத்தரை எப்பிடி மேரேஜ் பண்ணிக்க முடியும்?”

மிகவும் இலகுவாக கேட்டபடி நாற்காலியில் சாய்ந்து கால் மீது கால் போட்டுக்கொண்டான்.

நித்திலா என்ற ஒருத்தியைக் கண்டுகொள்ளாமல் மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.

One Month Plan – 30 Days (20 Novels)

Access for 30 days

Buy Now

Quick (3-Day) Plan (2 Novels)

Access for 3 days

Buy Now
error: Content is protected !!
HomeShopCartBlogMy Account