
அவள் கிளம்ப முற்படும் வேளையில், ரகுநந்தன் ரிமோட் மூலம் அந்த அறையின் நான்கு பக்கக் கண்ணாடிச் சுவர்களையும் பழுப்பு வண்ண ரோமன் பிளைண்ட்ஸ் திரைகளால் மூடினான்.
“நாம கொஞ்சம் பர்சனலா பேசலாமா நீரஜாட்சி?” என்று கேலியாகக் கேட்டுக்கொண்டே அவளருகே நெருங்கி வந்தான். அவனது பார்வையில் விசமமும் வெறுப்பும் மட்டுமே இருந்தன.
“எ… என்ன பண்ணுறீங்க சார்?”
“நான் சாரா உனக்கு?” அவனது அழுத்தமான குரல் அவளைச் சோதித்தது.
“ரகு… இது சரியில்ல. வெளிய உங்க ஸ்டாஃப்ஸ் இருக்காங்க. நீ எல்லையைத் தாண்டுறதா தோணலையா நந்து?” அவளது குரலில் இருந்த பரபரப்பு அவனுக்குக் குதூகலத்தை அளித்தது.
“ஒரு வழியா நீரஜாட்சிக்கு நான் நந்துனு ஞாபகம் வந்துடுச்சு போல.”
“ஏன் இதெல்லாம்? வெளிய இருக்கிறவங்க நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க?”
“ஐ டோண்ட் கேர்!” இரு கரங்களையும் விரித்தவன், “எப்பிடி இருக்கு என் தொழில் சாம்ராஜ்ஜியம்?” என்று கர்வமாகக் கேட்டான்.
நீரஜா தன்னைச் சமனப்படுத்திக்கொண்டு, அவனது கண்களைச் சவாலாகப் பார்த்தாள்.
“நல்ல வளர்ச்சி! கங்கிராட்ஸ்! இதுக்காக நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, அதுக்கு ஹாட்ஸ் ஆஃப்! இதெல்லாம் நான் மனசு நிறைஞ்சு சொல்ற வார்த்தைகள் நந்து. எனக்கு அடுத்தவங்களை மட்டம் தட்டிப் பேசுற பழக்கம் இல்ல.”
அடுத்த நொடியே ரகுநந்தன் அவளைத் தன் அணைப்பிற்குள் இழுத்தான். நீரஜா திமிறினாள்.
“திஸ் இஸ் டூ மச் நந்து! என் கிட்ட இப்படி நடந்துக்கிற உரிமையை நீ இழந்துட்ட. விலகி நில்லு!”
“நான் ஒருத்தர் மேல அன்பு வச்சுட்டேனா அவங்களை விட்டு விலகுறது இல்ல. இப்பவுமா உனக்கு அது புரியல நீரஜாட்சி?”
“எல்லாம் முடிஞ்சாச்சு நந்து.”
ரூ.50 செலுத்தில் தளத்தில் இருக்கும் 20 நாவல்களை ஒரு மாதத்துக்குப் படிக்கலாம்.
ரூ.20 செலுத்தி மூன்று நாட்களுக்கு இரண்டு கதைகளைப் படிக்கலாம்.
ரூ.100 செலுத்தி ஒரு மாதத்துக்குத் தளத்தில் இருக்கும் அனைத்துக் கதைகளையும் படிக்கலாம்.